Categories
உலக செய்திகள்

கணவனின் இறப்புக்குப் பின் பணியில் ஈடுபட்ட மகாராணி…. முதன்முறையாக புன்னகையுடன் பணியாற்றிய மகாராணி….. வைரலாகும் புகைப்படம்….!!

பிரிட்டன் மகாராணியார் கணவரின் இறப்புக்குப் பிறகு முதல் முறையாக அரசு பணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்கு கடந்த  ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது துக்கம் அனுசரிப்பு காலமும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கணவரை இழந்த மகாராணி முதன் முறையாக தனது அரச பணியில் ஈடுபட்டுள்ளார்.

மகாராணியார் வின்ஸ்டர் கோட்டையில் இருந்து காணொளி காட்சி மூலம் லாட்வியா மற்றும் ஐவரி கோஸ்டுக்கான புதிய வெளிநாட்டு தூதர்களிடம் சிரித்துப் பேசி உரையாற்றி வந்தார். கணவரின் இறப்புக்குப் பிறகு மகாராணியார் சிரித்த புகைப்படம் என்பதால் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதுபோன்ற சந்திப்பில் மகாராணி கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |