Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவுக்கு பிறந்தநாள்… ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. கடந்த டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின்  முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நடிகை சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |