Categories
மாநில செய்திகள்

மன்னித்து விடுங்கள் ”விரைவில் தமிழ் கற்கின்றேன்”அமித்ஷா பேச்சு ….!!

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தமிழ் பேச கற்றுக் கொள்கின்றேன் என்று  வெங்கையாநாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

Image result for amit shah

இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நான் தமிழில் பேச முடியாமைக்கு என்னுடைய  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நான் தமிழ் கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்தேன்.ஆனால் பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் அதை என்னால் கற்றுக்கொள்ள முடியல.ஆனால் நிச்சயமா சென்னையில் தமிழில் பேசுவேன் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்தார்.

Categories

Tech |