Categories
தேசிய செய்திகள்

617 வகையாக வைரஸிற்கு எதிராக… கோவாக்சின் சிறந்த பயன் அளிக்கும்… உண்மையை உடைத்த அமெரிக்க நிபுணர்…!!

கொரோனாவிற்கு எதிராக போராட அனைவரும் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்த வழிமுறை என அமெரிக்க மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பாஸி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் உள்ள தலைமை மருத்து ஆலோசகரும், பெருந்தொற்று நிபுணருமான டாக்டர் ஆண்டனி பாஸி கடந்த செவ்வாய்கிழமை அன்று வீடியோகால் மூலம் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது இந்தியா தயாரிக்கப்படும் கோவாக்சின்ன் தடுப்பூசியானது 617 உருமாறிய கொரோனா வைரஸை செயலிழக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதே சிறந்த வழிமுறை என கூறியுள்ளார். இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாகியுள்ள கோவாக்சின் தடுப்பூசி ஆனது கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை சோதனை செய்த போது கொரோனா வைரஸிற்கு எதிராக 78% செயல்படும் என தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு தடுப்பூசியின் மூலப்பொருள்களை இந்தியாவிற்கு அனுப்ப தயாராக உள்ளோம் என வெள்ளை மாளிகையின் சீனியர் ஆலோசகர் ஆண்டி ஸ்லாவிட் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிற்கு பெரும் உதவியாக இருக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |