வாத்தி கம்மிங் பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் வெங்கட் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது .
https://twitter.com/KarthikMdr3/status/1387311834202460165
இந்நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெங்கட் ‘மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.