வெங்கையா நாயுடு_விடம் கம்யூனிஸ்ட் பேராசிரியர் கேள்வி கேட்டதும் உடனே பதிலளித்தார் என்று அமித்ஷா மாணவ பருவத்தை குறிப்பிட்டு பேசினார்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது ,
ஆந்திராவில் நெல்லூர் பிறந்து இளம் பருவத்திலேயே ஆர்எஸ்எஸ் , ஏபிவிபி ஆகியவற்றோடு இணைந்து செயல்பட்டு அந்தக் கொள்கைகளை எப்படி வாழ்கையிலே பயன்படுத்தி அரசியலில் இருக்க வேண்டும் என்பதற்கு வெங்கையா நாயுடு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.நான் இங்கு ஒரு விஷயத்தை சொல்லவேண்டும். சமீபத்தில்நரேந்திர மோடி அரசாங்கமானது அரசியல் சட்டப்பிரிவு 370 இரத்து செய்தது.
வெங்கையா நாயுடு ஏபிவிபி மாணவர் பருவத்தில் இருக்கும் போது அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்பொழுது ஒரு கம்யூனிஸ்ட் பேராசிரியர் வெங்கையா நாயுடு_விட்டான் காஷ்மீரை பார்த்திருக்கிறாயா..? என்று கேட்டார் அப்போது அவர் பார்க்கவில்லை என்றார். அதற்க்கு பார்க்காமல் அதற்காக ஏன் போராட வேண்டும் என்றதுக்கு அதற்கு உடனே சட்டென்று ஒரு கண்ணை இன்னொரு கண் பார்க்க முடியாது.ஆனால் ஒரு கண்ணுக்கு வலி வந்தால், அதன் வேதனையை உணரும். அந்த மாதிரி ஆக நாம் உணர வேண்டும் என்று பதிலளித்தார் என்று பழைய சம்பவங்களை நினைவு படுத்தி அமித்ஷா பேசினார்.