இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று உள்ள புலம் பெயர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனின் தாக்கம் குறையவில்லை. இரண்டாவது அலையாக வீசப்படும் கொரோனா நோய் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கினால் வெளிமாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். முதன்முதலாக கொரோனா நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பெண் ஒருவர் சிறுவர் ஒருவனை தனது பெட்டியில் வைத்து இழுத்துக் கொண்டு போவதற்கான நிலைமை ஏற்பட்டது. இப்போது போடப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக பெண் ஒருவரை ஸ்டெச்சரில் வைத்து சிறுவன் தள்ளிக்கொண்டு போகும் புகைப்படம் மனதை உருகும் வண்ணமாக கண்கலக்கும்படி உள்ளது. இதன் இரண்டையும் இணைத்து இணையதளவாதிகள் வெளியிட்டுள்ளனர்.