சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரக்கன்று நடும் விழா மற்றும் நுழைவுவாயில் கும்பாபிஷேக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அதற்கு முன்னதாக கோமாதா பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் நுழைவு வாயிலில் உள்ள கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித நீரால் நடைபெற்றது. அதன் பின் தோரணவாயில் வளாகத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.