ஏழு கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த கடைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஒரு டீக்கடை, பெட்டிக்கடை மற்றும் 5 மீன் கடைகள் என அடுத்தடுத்து முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் அங்கு நின்ற இரண்டு புளிய மரங்களும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.