நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் .நீலகிரி , கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மழை சார்ந்த பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.நீலகிரி , கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாயாபகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும் , கோவை சின்ன கல்லாரில் 10 சென்டி மீட்டர் மழையும் , சோலையார் அவலாஞ்சியில் 8 சென்டி மீட்டர் மழையும் , தேனி மாவட்டம் பெரிய ஆறு , திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.