அமெரிக்காவில் தடுப்பூசியினுடைய 2 டோஸ்ஸையும் முழுவதும் எடுத்துக் கொண்ட நபர்கள் முகக் கவசத்தை அணியாமல் கூட வெளியே செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை 43 சதவீத மக்கள் தடுப்பூசியினுடைய முதல் டோஸ்ஸை பெற்றுள்ளனர். அதிலும் 29 சதவீத மக்கள் 2 டோஸ்ஸையும் பெற்றுக்கொண்டனர். இதனை அமெரிக்காவிலிருக்கும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிற்கான புதிய நெறிமுறைகள அறிவித்தது.
அதாவது தடுப்பூசியினுடைய 2 டோஸ்ஸையும் பெற்றுக் கொண்ட நபர்கள் முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் என்று அனுமதி அளித்தது. ஆனால் சில பொது இடங்களில் தேவைப்படும் போது முக கவசத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தியது. இதுகுறித்து அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடன் பேசியதாவது, உங்களின் அனைவருடைய ஒத்துழைப்பால் இந்த புதுவிதமான அதிர்ச்சி தரக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.