இந்தியாவுக்கான 10 நாட்கள் விமான தடையானது நடைமுறைக்கு வந்த நாள் ஆயிற்று கிழமையிலிருந்து டிக்கெட்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு தனியார் விமான நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை உலக மக்களிடையே மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. நித்தம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையிலான வழிதடத்தில் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பினை கேட்டறிந்த அமீரகம் செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருவதால் அச்சமடைந்து பலர் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பாகவே அமீரகம் செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டதால் தனியார் விமானங்களை பயணிகள் அணுகியுள்ளனர். அப்போது அந்நிறுவனம் விமான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. வசதி படைத்தவர் அந்த பணத்தை செலுத்தி விட்டு துபாய்க்கு திரும்பிவிட்டனர். ஆனால் ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் பணம் செலுத்த முடியாததால் ஏமாற்றத்துடன் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
இதுகுறித்து டிக்கெட் கட்டண ஒப்பீட்டு வலைத்தளங்களில் உள்ள தகவல்களில் மும்பையில் இருந்து துபாய்க்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவழிப்பாதை வர்த்தக விமானங்களில் டிக்கெட் கட்டணம் 80 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்துள்ளனர். இந்தக் கட்டணம் வழக்கமான கட்டணத்தைவிட 10 மடங்கு அதிகமாக உள்ளது. அதன்பின் டெல்லி துபாய் வழித்தடத்தில் விமான கட்டணம் 50,000 ரூபாய்க்கு மேல் உயர்த்தி இருந்தன. இதுவும் வழக்கமான கட்டணத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக பணம் செலுத்தி டிக்கெட் வாங்க முடியாமல் இருக்கும் நடுத்தர மக்கள் பெரும்பாலோனோர் துபாயில் உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்ட ஒன்றாகும்.