தெரு நாய்கள் கடித்து குதறியதால் தண்ணீர் தேடி வந்த மான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை வனப்பகுதியில் இருந்து மான்கள் தண்ணீர்காக சமதளப் பகுதிக்கு வருகின்றன. இந்நிலையில் சோபனபுரம் பகுதிக்கு அதிகாலை 2 மணியளவில் ஆண் புள்ளி மான் ஓன்று தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளது. இதனை பார்த்த தெருநாய்கள் ஓன்று சேர்ந்து மானை விரட்டி கடித்து குதறியதில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த புள்ளி மானின் உடலை மீட்டுள்ளனர். அதன் பின் கால்நடை மருத்துவர் சதிஷ் புள்ளி மானின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளார். அதன் பின் அங்கு உள்ள வனப்பகுதியில் மானின் உடலானது புதைக்கப்பட்டது.