வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது.
வாகன உற்பத்தி தொழில் துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் , தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால் வாய்ப்பில்லை என்று கூறியது . இதற்குமுன் ரியல் எஸ்டேட் துறையின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் , அதிலுள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீடிக்கவே செய்தது. ஆகையால், வரி குறைப்பு மட்டும் தீர்வல்ல என அரசு தரப்பில் கூறப்படுகிறது .
மேலும் வரியை குறைத்து அரசின் வருவாயை குறைக்க வேண்டுமானால் அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படுகிறது . இந்நிலையில் எரிபொருள் அதிகமாக பயன்படாத வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் தேவை அதிகமாக இருப்பினும் அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்யாமல் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தாமதம் செய்கிறது . மேலும் , சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத பெட்ரோலிய பொருட்கள் புழக்கத்தில் வருவது தொடர்பாக உச்சநீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அரசுக்கு கெடு விதித்துள்ளது .
இந்த கெடுவானது நீடிக்கவும் வாய்ப்பில்லை. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டில் வாகனங்களால் ஏற்படும் மாசு குறித்து கடுமை காட்டும் என்பதால் தற்போது உற்பத்தியாகும் புதிய கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்க மக்கள் முன்வரவில்லை . மேலும் , வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது.