சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவனை அலுவலர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வந்த போது அச்சத்தில் அந்த மாணவன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வயல் பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். அந்த மாணவனை கிராம உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம் தலைமையில் விரட்டிப் பிடித்தனர்.
அதன் பின்னர் வேலாயுதம் பட்டினம் மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் அந்த மாணவனை சிகிச்சைக்காக ஒப்படைத்தனர். அதன் பிறகு அமராவதி புதூர் மருத்துவமனைக்கு நேற்று அந்த மாணவனை அதிகாரிகள் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் அவரோடு பழகிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.