“அசுரன்” படத்தின் வெளியீட்டுக்காக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் .
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் “அசுரன்” . இப்படத்தில் தனுஷ் , மஞ்சுவாரியார் , பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன் , யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இப்படத்தின் பணிகளை விரைந்து முடிக்க படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன்பின் படத்தின் வெளியீட்டுக்காக பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் . இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் பின்னணி இசை தெறிக்க வேண்டும் என்று ஜிவி பிரகாஷ்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.