ராணிப்பேட்டையில் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பழனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருப்பாற்கடலில் அமைந்திருக்கும் துணை மின் நிலையத்தினுள் லயன்மேனாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சற்றும் எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கியதால் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பழனியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.