Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்…. கேரள போலீஸ் வழி எப்போதும் தனி வழி…. ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் வைத்து விழிப்புணர்வு…!!!

 

கேரள போலீஸார் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கமும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியாகி செம ட்ரெண்டான ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலை வைத்து கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளனர். மேலும், அந்த பாடலுக்கு ஏற்றவாறு காவல்துறையினர் மாஸ்க் அணிந்த படி நடனம் ஆடியுள்ளனர்.

கேரள போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “கேரளா போலீஸ் வழி எப்போதும் தனி வழி. எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |