சீனாவில் 18 பள்ளிக்குழந்தைகளை கத்தியைக் கொண்டு குத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சீனாவிலிருக்கும் குவாங்சி ஜூவாங்க் பகுதியில் சிறுவர்களுக்கான பள்ளிக்கூடத்தில் திடீரென்று மர்ம நபர் புகுந்து அங்கிருந்த மாணவர்களை கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கினார். இத்தாக்குதலில் மொத்தமாக 18 நபர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர். மேலும் 2 குழந்தைகளை மர்மநபர் கொன்றதாகவும் தகவல் கிடைத்துள்ளத. இந்த கொலைவெறி தாக்குதலை நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்ததோடு மட்டுமில்லாமல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விரக்தியிலிருக்கும் நபர்களோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களோ திடீரென்று இவ்வாறு பள்ளிக் கூடத்திலிருக்கும் குழந்தைகளின் மீது தாக்குதலை நடத்துகிறார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இதேபோல் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் குன்மிங் பகுதியில் 7 நபர்களை கத்தியைக் கொண்டு குத்தியும், ஒரு மாணவரை கைதியாக பிடித்து வைத்திருந்த 56 வயதுடைய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.