இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று 17 நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று இரட்டை மரபணு மாற்றம் அடைந்து B.1.617 என்ற புதிய வகை கொரோனா தொற்றாக உருமாறி பரவி வருவது கண்டறியப்பட்டது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு இந்த புதிய வகை கொரோனா காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் கடந்த சில தினங்களாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவில் உருமாறிய B.1.617 கொரோனா தொற்று தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் 17 நாடுகளுக்கு இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதில் அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் அடங்கும். மேலும் இந்தியாவில் உருமாறி உள்ள இந்த கொரோனா தொற்று அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளதால் வேகமாக பரவும் தன்மை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதற்கு இந்த உருமாறிய தொற்று ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.