இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 11 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு தொடங்கி அடுத்த மாதம் மூன்றாம் தேதி காலை 7 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.