Categories
மாநில செய்திகள்

தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை…. கூடுதல் கட்டுப்பாடுகள்…? – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். இதில் சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில்  கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |