ஜெர்மன் மருத்துவமனையில் நாலு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனி பெர்லின் விளக்கு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில் சுகாதார மையத்தில் 4 சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதார மையத்தில் சென்று பார்த்த போது 4 பேர் சடலமாக கிடந்ததாகவும் 5 வது நபர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கிடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆனால் அவர் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட பெண் சுகாதார மையத்தின் ஊழியர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகவில்லை.