கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கூடுதலாக 57 லட்சம் தடுப்பூசிகளை மாநில அரசுக்கு அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகிலேயே முதல் முறையாக மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 15,95,96,140 தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் 14 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை அனைத்து மாநில அரசுகளும் பயன்படுத்தியுள்ளது.
தற்போது 1,06,19,892 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 3 நாட்களுக்குள் இன்னும் 57,70,000 தடுப்பூசிகளை மாநில அரசுக்கு வழங்கப்போவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் காலியாகி விட்டது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் மூலம் 57 லட்சம் தடுப்பூசிகளைஅனுப்புவதால் இந்தியாவில் நோய் தொற்று கட்டுப்படும் என தெரிவித்துள்ளனர்.