டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல MAN VS WILD நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி தோன்றவிருக்கிறார்.
இதுகுறித்து பியர் கிரில்ஸ் ANI செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் காடுகளுக்கு அனைவருமே ஒன்று தான் தைரியமும்,அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே காட்டில் பயணிக்க முடியும், எங்களது பயணத்தில் மோசமான காலநிலை நிலவும். அப்போது போது கூட மோடி அவர்கள் அமைதியாகவும் உற்சாகத்துடனும காணப்பட்டார். கடுமையாக மழையின் போது கூட அவர் முகத்தில் புன்னகை தான் இருந்தது. பாதுகாப்பு குழுவினர் கொடை பிடிக்க முயன்ற போது கூட தேவையில்லை என்று கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அலாஸ்காவுக்கு அழைத்துச் செல்லும் அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப் போன்றது தான் இப்போது கிடைத்ததும். சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.சிறுவயதில் காட்டுப்பகுதியில் இருந்தவர் என்பதால் அவரால் எளிமையாக காட்டில் இருக்க முடிந்ததாகவும் பியர் கிரில்ஸ் தெரிவித்தார்.