Categories
உலக செய்திகள்

விவாகரத்து கோரிய மனைவி… கணவன் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!

பிரேசில் நாட்டில் விவாகரத்து கோரிய பெண்ணும், அவருடைய மூன்று மாத பச்சிளம் குழந்தையும் கணவர் கொடுத்த எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள இடப்பமா எனும் பகுதியில் வசித்து வரும் லூயிஸ் எடிவால்டோ டே சூசா (35) விவாகரத்து கோரிய தனது மனைவி ஜோசியிலே லோப்ஸ் (36)-க்கு எலி மருந்து கலந்த உணவை அளித்துள்ளார். அதனை சாப்பிட்ட அவரது மனைவி தனது மூன்று மாத பிஞ்சு குழந்தைக்கு பாலூட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாயும், பச்சிளம் குழந்தையும் துடிதுடித்து ஒரே நேரத்தில் இறந்துள்ளனர். இதற்கிடையே லோப்ஸ்-ன் 17 வயது மகன் லோப்ஸ் மற்றும் அவரது பிஞ்சு குழந்தை இருவரையும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதையடுத்து கடந்த வருடம் செப்டம்பர் 23-ம் தேதி அவர்கள் இருவருடைய உடலையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும் டே சூசா தனது மனைவி செல்போனிலிருந்து உறவினர்களுக்கு பதிலளித்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் விவாகரத்து கோரிய தனது மனைவிக்கு எலி மருந்து கலந்து கொடுத்ததாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கெஞ்சிய மனைவியையும், அவரது குழந்தையையும் 73 மைல்கள் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றதையும், அங்கு அவர்கள் இறந்ததையடுத்து அவர்கள் இருவரையும் டே சூசா அங்கேயே புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அடுத்த வார இறுதியில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.

Categories

Tech |