இன்றைய காலகட்டத்தில் பலரும் அதிகம் பணம் சேமிக்க வேண்டும், அதிக வசதியோடு வாழ வேண்டும் என்ற ஆசை காரணமாக ஓடி ஓடி வேலை செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு கூடியுள்ளது. பணம் இருந்தால்தான் மதிப்பு என்ற அளவுக்கு உலக மாறிவிட்டது இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூபாய் 75 கோடி சம்பளம் வாங்கிய மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவி ஆகியுள்ளார்.
பிரகாஷ் என்ற அந்த நபர் கடந்த ஆண்டு கொரோனா உலகத்தையே ஆட்டிப்படைத்ததிலிருந்து ஆடம்பர வாழ்க்கையை துறந்துள்ளார். இவர் அம்பானியின் வலதுகரமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மனைவி ஆஷாவும் துறவரம் பூண்டுள்ளார்.