Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு உதவிப்பொருட்கள்…. 2 விமானங்களில் வருகை…. உதவிக்கரம் நீட்டும் ரஷ்யா…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்படுவது வேதனையளிக்கிறது. இந்த கடினமான சூழலில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்படவும், உதவவும் ரஷ்யா, இங்கிலாந்து, தைவான் போன்ற உலக நாடுகள் முன்வந்துள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு உதவும் வகையில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வெண்டிலேட்டர், 150 மானிட்டர் மற்றும் பிற தேவையான மருந்து பொருட்கள் என மொத்தம் 21 மெட்ரிக் டன் எடையுள்ள பொருட்கள் இரண்டு விமானங்களில் ரஷ்யா இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பொருட்களை வினியோகம் செய்வதற்கு நேரடி வரிகள் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |