Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓடு ஓடு இல்லேன்னா மாட்டிப்போம்” துரத்தி பிடித்த போலீசார்… கோவையில் பரபரப்பு…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் பொள்ளாச்சி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை துரத்திப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்திருப்பேரை பகுதியில் வசிக்கும் முத்துசாமி, பிரகாஷ், சங்கரபாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் மூவரும் கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை வழிப்பறி செய்ததும், மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |