Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட…. நேற்று ஒரு நாளில் மட்டும்…. 1.23 கோடி பேர் முன்பதிவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்படுவது வேதனையளிக்கிறது. இந்த கடினமான சூழலில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்படவும், உதவவும் ரஷ்யா, இங்கிலாந்து, தைவான் போன்ற உலக நாடுகள் முன்வந்துள்ளது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கியது. மற்றும் யூமாங் செயலில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1.23 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |