சுவிட்சர்லாந்தில் கிராமப்புற சூழலில் உள்ள வீடுகளுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களது குடியிருப்புகளிலேயே முடங்கியும், பணியாற்றியும் வந்தனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புகளுக்கு முக்கியத்துவத்தை உணர தொடங்கி உள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் அதிகமான குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் தனி வீடுகள் மீது தற்போது நாட்டம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பொதுமக்கள் கிராமபுற சூழலில் உள்ள வீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பிரபல நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் அதிக இடவசதி கொண்ட வீடுகளுக்கும், காற்றோட்டமான இடத்தில் வாழ்வதற்கும் சுவிஸ் மக்கள் முன்னுரிமை கொடுப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் மொட்டைமாடி அல்லது தோட்டத்திற்கான விருப்பமும் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தற்போது பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு தோட்டம் மற்றும் மொட்டைமாடி ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது கனவு இல்லத்தை சொந்தமாக்க இன்னும் ஓராண்டுகள் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளனர்.