குக் வித் கோமாளி செட்டிற்க்கு Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 போட்டியாளர்கள் வந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது . இந்த நிகழ்ச்சியை முடிக்க வேண்டாம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். அதன்படி இந்த இரண்டாவது சீசன் சீக்கிரம் முடிக்கப்படாமல் ஸ்பெஷல் சுற்றுகள் வைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. சமீபத்தில் வெற்றிகரமாக இரண்டாவது சீசன் நிறைவடைந்தது.
கஸ்தூரி மேஸ்திரி! 😂🤣
Mr & Mrs சின்னத்திரை – வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #MrMrsChinnathirai #VijayTelevision pic.twitter.com/cVq9qaXc7n
— Vijay Television (@vijaytelevision) April 29, 2021
இந்நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி செட் திறக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதாவது குக் வித் கோமாளி செட்டிற்க்கு Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 போட்டியாளர்கள் வந்துள்ளனர். இந்த வாரம் சின்னத்திரை சீசன் 3 போட்டியாளர்களுக்கு சமையல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் கலகலப்பான புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.