பக்ரீத் திருநாள் எப்படி தோன்றியது என்று இந்த கட்டுரை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நபி இப்ராஹிம் தன்னுடைய காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின் போது அச்சமில்லாமல் இறைக் கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மார்க்கத்தை எடுத்து வைத்தவர். இறைவனே எல்லாம் அவனுக்கு இணையானது என்று எதுவுமே கிடையாது அப்படிங்கிற இறை பற்றோடு வாழ்ந்த அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் கிடையாது. இதனால் மனம் வருந்திய நபி இப்ராஹிம் புத்திர பாசம் கிடைக்காமல் ஏங்கினார்.
அப்பதான் மிகப் பெரும் அருட்கொடையே நபி இப்ராஹிமின் இரண்டாவது மனைவியான ஹாஜரா அம்மையார் மூலம் நபி இஸ்லாமில் பிறந்தார். இதன் பின் நபி இப்ராஹிம் வாழ்க்கை இன்பமயமாக தொடர்ந்தது.அதே நேரத்தில் இறைவன் மேல் அவர் வைத்திருந்த பற்றும் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு நாள் நள்ளிரவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹிமுக்கு ஒரு கனவு வந்தது. அதில் தன்னுடைய மகனை தானே இறைவனுக்கு பலி கொடுக்கிற மாதிரி கனவு கண்டார். அதற்குப் பின் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
அவர்கள் கண்ட கனவை இப்ராஹிம் நபி தன்னுடைய அன்பு மகனிடம் சொன்னாரு. அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்த இப்ராஹீம் நபிக்கு பிறந்த பிள்ளை தந்தையர் கருத்துக்கு மாறாக செயல் பட வாய்ப்பே இல்லையே.கனவுல வந்த இறை கட்டளையை உடனே நிறைவேற்றுக என் தந்தையே என்று தன்னுடைய அப்பா கிட்ட நபிகள் சொல்லி இருந்தார்.ஆனால் அப்பாவோட பாசத்தின் முன்னாடி அவருடைய இறை பற்றில் எதாவது குறை வந்து விட போகுது என்று நினைத்த நபி அவருடைய கண்களை துணியால் கட்டி கையில கோடாரியும் அவரை கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தார்.
அந்த சமயத்தில் எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது அல்லாஹ்வுடைய எண்ணமா எழுந்து நின்னுச்சு ஷிப்ரைல் என சொல்லப்படும் வானவரை அனுப்பி இறைவன் அல்லாஹ் அந்த பலியை தடுத்தார். அங்க ஒரு ஆட்டை இறக்கி வைத்து இறைவன் இஸ்மாயிலுக்கு பதிலா ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமுக்கு கட்டளை கொடுத்தார். இறைவன் அன்புக்காக துணிந்து தன் உயிரையே கொடுக்க நினைத்த இஸ்மாயில், அப்புறம் அவருடைய தந்தையுடன் தியாகத்தை பாராட்டி அதன் நினைவாக கொண்டாடப்படுவதால் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் எல்லாருக்குமே பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.