விமானப்படை அதிகாரியின் வீட்டில் 8 போன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் நிக்கல் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நிக்கல் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருவனந்தபுரம் சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக அவர் சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.