அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை மர்ம நபர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஓட்சிகோ கவுண்டியில் வசிக்கும் 19 வயது இளம்பெண் அபிகைல் அர்சினால்ட். இவர் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, தன்னை துப்பாக்கியால் மிரட்டி, மர்மநபர் ஒருவர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நபரிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அந்த நபரை பிடிப்பதற்காக அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் அந்தப் பெண்ணை யாரும் கடத்தவில்லை, அவர் பொய் கூறியுள்ளார் என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இதனை அறிந்தவுடன் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதனால் பொய் புகார் கூறிய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்பு அந்த பெண்ணை ஜாமீனில் விடுவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் அந்த பெண் அடுத்தமாதத்தில் 13ம் தேதி அன்று ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.