Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களுக்கு…. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் – சத்யபிரதா சாஹு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இருப்பினும் மே-2 முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மே இரண்டாம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி வந்த நிலையில் 8 மணிக்கே தொடங்கிவிடும் என்று சத்யபிரதா சாஹு ஏற்கனவே அறிவித்துள்ளார். முகவர்கள், வேட்பாளர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |