Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்… தப்பித்த பல லட்சம் ரூபாய்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ சிதம்பரனார் துறைமுகம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதற்கு அருகில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தினர் மற்றும் தொழிலாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் மையம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த வங்கி ஊழியர்கள் உடனடியாக தெர்மல் நகர் காவல் துறையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வங்கி அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதில் ஏ.டி.எம் எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போகாமல் அப்படியே இருந்துள்ளது. அதாவது கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர் லாக்கரை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |