நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விவேக் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில் 2 நாட்கள் கழித்து நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதால் தான் உயிரிழந்தார் என்று பரபரப்பு பேட்டி அளித்தார்.
இதனால் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப கூடாது எனக்கூறி ரூபாய் 2 லட்சம் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.