இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 50 அரை சதங்களை, அடித்த முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார்.
நேற்று நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். எனவே நேற்றைய போட்டியின் மூலமாக , ஐபிஎல் போட்டிகளில் 50 அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அதிக அரைசதம் அடித்த வீரர்களில் ,ஷிகர் தவான் 2வது இடத்திலும் மற்றும் விராட்கோலி 3-வது இடத்திலும் உள்ளனர் . அதோடு 200 க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் 8வது இடத்தை பெற்றுள்ளார். இதுதவிர ஐபில் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த ,வெளிநாட்டு வீரர்களில் வரிசையில் கிறிஸ் கெய்ல் 354 சிக்சர்ககளும் , ஏபி டி வில்லியர்ஸ் 245 சிக்சர்கள் மற்றும் பொல்லார்டு 202 சிக்சர்கள் ஆகிய வீரர்களுக்கு அடுத்ததாக 4 வது இடத்தில் உள்ளார் .