ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம் எஸ் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத இடைவெளி எடுத்து இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்றுவரும் எம் எஸ் தோனி தற்போது காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் 106 டி.ஏ பாட்டலினில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்மாதம் 15-ம் தேதி வரை அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கவும் அதில் இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கவும் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதின் விளைவாக அங்கு அமைதி இன்மை நிலவி வருகிறது. மேலும் அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் காஷ்மீரில் ஒரு அகாடமி திறப்பது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் முறையாக அறிவிப்பார் என கூறப்படுகிறது.