Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்…. தடுப்பூசி போடும் முகாம்…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அனைவரும் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியிலுள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.

அந்த முகாமிற்கு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வண்டலூர் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து முகாமில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.

Categories

Tech |