Categories
உலக செய்திகள்

போதைப்பொருள் விற்பனைக்கு நிகரானது…. விதிமுறையை மீறிய வாலிபர்…. கண்டனம் தெரிவித்த நீதிபதி….!!

கனடாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபருக்கு நீதிபதி 5,000 டாலர்கள் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதித்துள்ளார்.

கனடா வான்கூவரிலிருக்கும் ஒரு வீட்டிற்குள் காவல்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு மக்கள் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறி மதுவை அருந்தியதோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணத்தில் பெண்களும் நடனம் ஆடியதை கண்டனர். இந்த நிலையில் வீட்டினுடைய உரிமையாளரான முஹம்மத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து முகம்மதினுடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது, அவர் அவருடைய வீட்டில் வைத்து பார்ட்டியை நடத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து பார்ட்டி கைமீறி போய்விட்டது என்கின்ற வாதத்தை முன்வைத்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி, பார்ட்டியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை, ஆனால் நீங்களோ மதுவிற்கு கட்டணம் வசூலித்ததோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணத்துடன் பெண்கள் நடனமாடியதை சுற்றி ஆண்கள் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். எனவே இது ஒரு பார்ட்டி அல்ல, இது மிகப்பெரிய குற்ற செயல் என்று நீதிபதி கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இதில் பங்கேற்ற யாரேனும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தால் நீங்கள் கொலைக்குற்றம் செய்ததாகவே நான் கருதுகிறேன் என்றார். மேலும் தெருக்களில் போதைப்பொருள் விற்பனை செய்து தினமும் ஒருவரை பழிவாங்கும் செயல் போல நீங்கள் செய்துள்ளீர்கள் என்றார் நீதிபதி. இதனால் முகமதுக்கு 5000 டாலர்கள் அபராதம் மற்றும் ஒரு நாளுக்கான சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Categories

Tech |