கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி வாடும் மக்களுக்கு இஸ்கான் கோவில் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் வறுமையில் வாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் வேலைக்கு செல்ல முடியாமலும் ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களும் சமூக அமைப்புகளும் வழிபாட்டுத்தலங்களும் தங்களது முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. அவ்வகையில் டெல்லியில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பசியும் பட்டினியுமாக வாடும் மக்களுக்கு டெல்லியில் உள்ள இஸ்கான் கோவில் நிர்வாகம் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதில் இளம் துறவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பசியால் வாடும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேடிச் சென்று உதவி வருகின்றனர்.