இப்போது 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட ஆரம்பித்தால் கொரோனா 3-வது அலையை நாம் வரவேற்பதற்கு சமமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமானது தடுப்பூசியும் விலையை நிர்ணயித்துள்ளது. இதனை பொதுமக்களால் கொடுக்க இயலாது என்பதால் பல மாநிலங்கள் தங்கள் மக்களுக்காக இந்த தடுப்பூசி இலவசமாக போட திட்டமிட்டுள்ளன.
அந்தவகையில் மகாராஷ்டிர மாநில அரசும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. அதேவேளையில் மத்திய அரசு அறிவித்தபடி மே 1ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட இயலாது என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. ஏனெனில் தடுப்பூசி போடுவதற்கு ஒன்பது கோடி பேர் தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மருந்துகள் போதுமானதாக இல்லை என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும் போது “இப்பொழுது தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கினால் நாம் கொரோனா மூன்றாவது அலையை அழைத்ததற்கு சமமாகும். மேலும் தடுப்பூசி போடும் திட்டத்தை ஒத்தி வைத்தால் சில மாதங்களில் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவு, கன மழை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும். இதனால் தடுப்பூசி போடுவதில் சிக்கல்கள் ஏற்படும். அதேபோல் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தன்னுடைய புதிய அவதாரத்தை எடுத்துக்காட்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.