Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த விராட் கோஹ்லி…!!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி  பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப்  போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி  19 ரன்கள் கடந்த நிலையில், ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

Image result for virat kohli century

மேலும் தொடர்ந்து விளையாடிய கோஹ்லி ஒருநாள் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக வேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் ரோகித் சர்மா படைத்த சாதனையை  முறியடித்துள்ளார்.  தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது 42வது சதத்தை பதிவு செய்தார். மேலும் அணித்தலைவராக ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை படைத்து,  இப்போட்டியில் மூலம் வீராட் கோலி ஒருநாள் போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |