Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

இரண்டு வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம்  50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும். இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Categories

Tech |