Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் பணிகளில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் மே 2ம் தேதி முழு ஊரடங்கு அன்று வாக்கு எண்ணும் பணிகளில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உணவு எடுத்து செல்பவர்களுக்கும் எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளாது. மேலும் முழு ஊரடங்கு என்றாலும் சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |