Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என்னால கொடுக்க முடியாது” வாலிபருக்கு கொலை மிரட்டல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளியை தாக்கியதோடு, இருவர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி ராஜா முத்தையாபுரம் அம்மன் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யன் கோவில் தெருவில் வசிக்கும் சக்தி மற்றும் செல்வகணேஷ் ஆகிய 2 பேரும் இசக்கி ராஜாவின் செல்போனை கேட்டிருக்கின்றனர்.

ஆனால் இசக்கிராஜா அவரது செல்போனை கொடுக்க மறுத்ததால் சக்தியும், செல்வகணேஷும்  இணைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இசக்கி ராஜாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து இசக்கி ராஜா முத்தையா புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |