கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சென்ட்ரிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்காடு பகுதியில் செல்வராஜ் என்ற சென்ட்ரிங் தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.