அமெரிக்காவில் இளம் பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அமெரிக்கா மிச்சிகனின் ஓட்சிகோ கவுண்டியை சேர்ந்த அபிகைல் அர்சினால்ட் (19) என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு என்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். கடத்திய நபரிடமிருந்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தான் தப்பித்து வந்து விட்டேன் என்றும் குற்றவாளியை கண்டுபிடிக்கும்மாறு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுக்குறித்த விசாரணை விசாரணையில் அபிகைல் யாரும் கடத்தவில்லை என்றும் அவர் கூறிய அனைத்தும் பொய் எனவும் தெரியவந்துள்ளது. இந்த உண்மையை கண்டறிந்த காவல்துறையினர் பொய்யான தகவலை கூறிய குற்றத்திற்காக அபிகைல் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் பத்தாயிரம் டாலர் அபராதம் விதித்து அடுத்த மாதம் 11ஆம் தேதி மேற்கண்ட விசாரணைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.